புதிய தோற்றத்துக்கு மாறிய அஜித்

சென்னை: துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் புதிய தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித்குமார். அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்துக்காக நீளமான தாடி வளர்த்திருந்தார் அஜித். படப்பிடிப்பு முடிந்து, தனது டப்பிங் பணிகளும் முடிந்ததை அடுத்து, அவர் தாடி, மீசையை நீக்கி புதிய தோற்றத்துக்கு மாறிவிட்டார். துணிவு படத்துக்கு பிறகு அவர் விக்‌னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்காக தாடி, மீசை இல்லாத கிளீன் ஷேவ் செய்த இந்த தோற்றத்துடன்தான் அஜித் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பாரீசுக்கு மனைவி ஷாலினியுடன் சென்று வந்தார் அஜித். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் ஏர்போர்ட்டுக்கு சென்ற அஜித்தின் வீடியோவும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் தற்போதைய புதிய தோற்றத்தில் அஜித் இருக்கிறார்.

Related Stories: