மும்பை ஏர்போர்ட் ஸ்தம்பிப்பு

மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பித்ததால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் 2வது டெர்மினலில் நேற்று திடீரென சர்வர் மெதுவாக இயங்க தொடங்கியது. சுமார் 1 மணிநேரம் இந்த பாதிப்பு நீடித்தது. இதனால் பயணம் செய்ய இருந்த பயணிகளை சோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில விமானங்களின் நேரம் தள்ளி வைக்கப்பட்டது. பயணிகள் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் டிவிட்டரில் அதிகம் பகிரப்பட்டன.  

இதையடுத்து உள்ளூர் விமான முனையத்தில் இருந்தும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன. இதுகுறித்து ஏர் இந்தியா நிர்வாகம் அளித்த விளக்கத்தில், ‘சர்வர் பழுதை சரி செய்ய தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளோம். சர்வர் மெதுவாக இயங்கியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: