அரசுத்துறை வணிகம் கையாள முகவர் வங்கியாக டிஎம்பிக்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம்

சென்னை: அரசுத்துறை சார்ந்த வணிக நடவடிக்கைகளை கையாளுவதற்கான முகவர் வங்கியாக டிஎம்பிக்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பெயர் பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டு வருகிறது. இந்த வங்கி நாடு முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையாற்றி வருகிறது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.  வங்கி தனது தொலைநோக்கு திட்டமாக நாடுமுழுவதும் மீண்டும் விரிவாக்க நடவடிக்கைகளிலும் அதன் சேவை திட்டங்களிலும் புதிய  பரிமாணங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது பாரத ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை அரசுத்துறை சார்ந்த வணிக நடவடிக்கைகளை கையாளுவதற்கான முகவர் வங்கியாக அங்கீகாரம் அளித்துள்ளது. இதனை  வங்கியின் அனைத்து  நிலை உடமைதாரர்களுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக வங்கியின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் ெதரிவித்துள்ளார்.

Related Stories: