‘வாட்ஸ் அப்’ குரூப் அமைத்து ரேஷன் கடை ஊழியர் சேவை

உடுமலை: திருப்பூர்  மாவட்டம், உடுமலை அருகே குருவப்பநாயக்கனூர் ரேஷன் கடையில் மாற்றுத்திறனாளி  சரவணன் விற்பனையாளராக உள்ளார். இவர் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களையும் ஒருங்கிணைத்து ‘வாட்ஸ் அப்’ குரூப்  உருவாக்கி உள்ளார். அந்த குரூப் மூலம் ஒவ்வொருவருக்கும் ரேஷன் கடையில் உள்ள அத்தியாவசிய  பொருட்களின் இருப்பு விவரம் குறித்து தகவல் தெரிவிக்கிறார். அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் தேவையான பொருட்கள் உள்ள நாட்களில் கடைக்கு சென்று  வாங்கிச் செல்கின்றனர். மேலும் அவர் கடை  வேலை நேரம், வேலை நாள், அரசு விடுமுறை, தற்காலிக விடுமுறை குறித்தும்  முன்கூட்டியே அந்த குரூப்பில் பதிவிடுகிறார். இதனால் அந்த தகவல் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் சென்றடைகிறது. ரேஷன் கடை ஊழியரின் இந்த சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Stories: