கிணற்றில் விழுந்து குழந்தை பலி கள்ளக்காதலனுடன் தாய் கைது: உல்லாசமாக இருக்கச் சென்றது அம்பலம்

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் தோட்டத்தில் தங்கி வேலை செய்பவர் பாலு (42). இவரது அக்கா மகள் துர்காதேவி (26). இவருக்கும், எரியோட்டை சேர்ந்த ராஜதுரைக்கும் (31), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. ஓராண்டாக கருத்து வேறுபாட்டால், தம்பதியர் பிரிந்தனர். கடந்த நவ. 25ம் தேதி துர்காதேவி குழந்தையுடன், தாய் மாமா பாலுவின் தோட்டத்தில் வந்து தங்கியுள்ளார். அன்றிரவு அங்கு விளையாடிய குழந்தை திடீரென மாயமானது. மறுநாள் (நவ. 26) காலை பார்த்த போது தோட்ட கிணற்றில் குழந்தை இறந்து மிதந்தது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் துர்காதேவிக்கும், நிலக்கோட்டை அடுத்த தோப்புபட்டியை சேர்ந்த அஜய்க்கும் (21) கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு அஜய், துர்காதேவி உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றபோது, குழந்தையை கிணற்றின் அருகே இறக்கி விட்டு சென்றுள்ளனர், அப்போது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அஜய், துர்காதேவியை கைது செய்தனர்.

Related Stories: