லீவு கேட்ட போலீஸ்காரரை ஆபாசமாக பேசிய டிஎஸ்பி: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் லீவு கேட்ட காவலரை ஆயுதப்படை டிஎஸ்பி ஆபாசமாக பேசும் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர். மேலும், இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, பயிற்சி எஸ்ஐ ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதப்படை டிஎஸ்பியாக விநாயகம் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர், டிஎஸ்பி விநாயகத்திடம் லீவு தரும்படி கேட்டுள்ளார். இதற்கு, அவர் காவலரை ஆபாசமாக பேசியுள்ளாராம். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து டிஎஸ்பி விநாயகம் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட காவலர் பல மாதங்களாக விடுப்பில் இருந்தார். இதுசம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு மீண்டும் விடுப்பு வேண்டும் என கேட்டார். அப்போது நான் பேசியதை பதிவு செய்து சமூக வலைதளங்களில் விட்டுள்ளார்’ என்றார்.

Related Stories: