கோயில் இணையதளங்களின் செயல்பாட்டுக்கு வழிகாட்டுதல்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் பல முக்கிய கோயில்கள், மடங்கள் உள்ளன. பக்தர்கள் கோயிலுக்கான காணிக்கைகளை நேரடியாக செலுத்தி ரசீது பெறுகின்றனர். வெளிமாநிலங்களிலும், வெளிநாட்டிலும் இருக்கும் பக்தர்கள் கோயிலின் வங்கிக்கணக்கில் இணையதளம் மூலம் பணம் செலுத்துகின்றனர். அதே நேரம் தமிழகத்திலுள்ள பல முக்கிய கோயில்களின் முகவரியில், சில தனியார் இணையதளங்கள் பக்தர்களிடம் பணம் வசூலிக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், கோயில் இணையதளங்கள் செயல்பாடு குறித்து உரிய வழிகாட்டுதல்களை உத்தரவாக பிறப்பிக்க உள்ளதாக கூறி, தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Related Stories: