3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை வெற்றி

பல்லேகலே: இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று பல்லேகலே மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன் எடுத்தது. இப்ராஹிம் ஜட்ரான் 138 பந்தில் 162 ரன் விளாசினார். பின்னர் களம் இறங்கிய இலங்கை 49.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

சரித் அசலங்கா நாட் அவுட்டாக 83 ரன் அடித்தார். இந்த வெற்றி மூலம் 1-1 என தொடரை இலங்கை சமன் செய்தது. முதல் போட்டியில் ஆப்கன் வென்ற நிலையில் 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: