அமைச்சரை தேசத் துரோகி என்று கூறிய பாதிரியார் மீது போலீஸ் வழக்கு

திருவனந்தபுரம்: விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. மீனவர் சங்கத்தினர் நடத்திவரும் இந்த போராட்டத்திற்கு திருவனந்தபுரம் மாவட்ட லத்தீன் கத்தோலிக்க சபை ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சபையை சேர்ந்த ஏராளமான பாதிரியார்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துறைமுகத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் தேச துரோக செயல் என்று கேரள துறைமுக பொறுப்புத் துறை அமைச்சர் அப்து ரகுமான் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த லத்தீன் கத்தோலிக்க சபை பாதிரியார் தியோடோஷியஸ் டிக்ரூஸ், அமைச்சர் அப்து ரகுமான் தான் தேசத் துரோகி என்றும், அவரது பெயரிலேயே அது இருக்கிறது என்றும் கூறினார்.

பாதிரியாரின் இந்த கருத்து கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் விழிஞ்ஞம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாதிரியார் தியோடோஷியஸ் டிக்ரூஸ் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி விழிஞ்ஞம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: