நெல்பயிர்களை தீயிட்டு கொளுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: வேலூர் அருகே பரபரப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த கொண்டாரெட்டிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(35), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார். இதையடுத்து அரசு அறிவித்த வழிகாட்டுதல்படி கடந்த 2 மாதத்திற்கு முன் பயிர் காப்பீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பொன்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால் சிவக்குமார் மற்றும் அப்பகுதி நிலத்தில் தண்ணீர் ேதங்கி நெற்பயிர்கள் சேதமானது.  இதுகுறித்து வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் சேதமான பயிர்களை இன்று தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சேதமான நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட வேண்டும், இன்சூரன்ஸ் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்த பொன்னை இன்ஸ்பெக்டர் தர் மற்றும் போலீசார் சென்று விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: