ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும்: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை : ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.50,000 பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இது ஆன்லைன் சூதாட்ட தடை நீக்கப்பட்ட பிறகு நிகழும் 34-வது தற்கொலை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உயர்நீதிமன்றம் கூறியிருப்பதால் அதனையேற்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது தொடர்பான அவசர சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காததால் அவசர சட்டம் காலாவதியானது.

Related Stories: