சென்னையில் 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னையில் ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளை சார்ந்த தூதரக அதிகாரிகளை சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய அன்பில் மகேஷ் பன்னாட்டு புத்தக கண்காட்சியில் 40 நாடுகள் வரை பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் 2 வாரம் புத்தக கண்காட்சி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். கல்வியை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றாக பன்னாட்டு புத்தக கண்காட்சி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

Related Stories: