முதுமலை சாலையோரத்தில் உணவு தேடி காட்டுயானை கூட்டம் முகாம்: வனத்துறை எச்சரிக்கை

பந்தலூர்: பந்தலூர் அருகே முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் பகுதியில் பிரதான  சாலையோரத்தில் மேய்ச்சல் தேடி யானைகள் கூட்டம், கூட்டமாக வந்தன. இதனை சுற்றுலா பயணிகள்  கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக பருவமழையின் தாக்கம்  அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக முதுமலை வனவிலங்குகள் சரணாலயம்  , தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட மழையின் அளவு அதிகரித்து  காணப்பட்டது.

இதனால் வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் குறைந்துள்ளது.  வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விரும்பி உண்ணும் உணவுகள்  குறைந்து காணப்படுகிறது. இது தவிர வனவிலங்குகளுக்கு எதிரான லாண்டனா என்கிற  உண்ணிச்செடிகள் அதிகரித்துள்ளது.இதனால் யானைகள் உணவு தேடி கூடலூரில்  இருந்து மைசூர் செல்லும் முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் பகுதியை ஒட்டியுள்ள  சாலையோரத்தில் முகாமிட்டுள்ளன.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்து செல்கிறார்கள். சிலர் ஆபத்தை உணராமல் வாகனங்களில் இருந்து இறங்கி  செல்போனில் படம் எடுத்தும் செல்கின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணி மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: