விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஓட்டனந்தல் புதுமனை தெருவை சேர்ந்தவர் கவிதாஸ்(26). பொக்லைன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2019ம் பிப்ரவரி 17ம் தேதி இரவு ஆலங்குப்பம் பகுதியில் பைப்லைன் புதைக்கும் பணியை முடித்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அதே கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் சத்தம் போடவே ஆத்திரமடைந்த கவிதாஸ் தான் வைத்திருந்த பேனா கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் குத்தி படுகொலை செய்தார்.
இறந்த பிறகு மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் காளிதாஸ் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து கவிதாஸை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பு கூறிய நீதிபதி சாந்தி குற்றவாளி கவிதாசுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
8 வழக்கில் தொடர்புகவிதாஸ் ஏற்கனவே 8 வழக்கில் தொடர்புடையவர். கண்டமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கலித்திரம்பட்டு பகுதியில் வயதான அக்கா, தங்கை ஆகியோரை கொலை செய்துவிட்டு பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு நகையை திருடி சென்ற வழக்கும் அவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.