ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டத்திற்கு இடையே மருந்தாளுநர்களும் கோரிக்கை அட்டைகள் அணிந்து நூதன போராட்டம்

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டத்திற்கு இடையே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநர்களும் கோரிக்கை அட்டைகள் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 132 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளன. இந்த ஊழியர்கள் தூய்மை, காவல், நோயாளிகளை மருத்துவ அறைக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால், இவர்களுக்கு அரசு அறிவித்த மாதாந்திர ஊதியம் ரூ.21,000 பதிலாக ரூ.8,400 மட்டுமே ஒப்பந்த நிறுவன சார்பில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஒப்பந்த ஊழியர்கள் ஊதியத்தை முழுமையாக வழங்க வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் 2-வது நாளாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதேபோல் மருந்தாளுநர்களும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டைகளை அணிந்து இன்று பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக 1300-க்கு மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவது, மருந்தாளுநர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை, மருந்து கிடங்கு அலுவலர் மற்றும் தலைமை மருந்தாளுநர் பணியிடங்களை பதிவு உயர்வு மூலம் நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். வரும் 8-ம் தேதி வரை கோரிக்கை அட்டைகளை அணிந்து கொண்டு பணியில் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்துள்ள மருந்தாளுநர்கள் டிசம்பர் 9-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்.    

Related Stories: