இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் ஓபிசி பிரிவுக்கான 2,396 இடங்கள் பறிப்பு: அகில இந்திய ஓபிசி மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை : இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் ஓபிசி பிரிவுக்கான 2,396 இடங்கள் பறிக்கப்படுவதாக அகில இந்திய ஓபிசி மாணவர் சங்கம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு இடங்கள் 2445 ஆகும். 2445 மருத்துவ அப்படிப்பு ஓபிசி இடங்களில் வெறும் 49 இடங்கள் மட்டுமே ஓ.பி.சி. இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பட்டுள்ளன. ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உரிய இடங்கள் கிடைப்பதை ஒன்றிய சுகாதார சேவைகள் துறை தலைவர் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உரிய இடங்கள் கிடப்பதை உறுதிசெய்யக் கோரி பிரதமருக்கு மாணவர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறும் ஓபிசி மாணவர்கள் பொதுப்பேரிவுக்கான மருத்துவ படிப்பு இடங்களிலேயே சேர்ந்துவிடுகின்றனர். கூடுதல் மதிப்பெண் பெறுவதால் பொதுப்பிரிவில் மருத்துவ படிப்பு இடங்களில் சேரும் மாணவர்களை இடஒதுக்கீடு கணக்கில் கொண்டு வரக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் போட்டியிட்டு இடம்பிடிக்கும் ஓபிசி மாணவர்களை பொதுப்பிரிவு கணக்கிலேயே சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பொதுப்பிரிவில் இடம்பிடிப்போரை ஓபிசி இடஒதுக்கீட்டின் கீழ் கணக்கிடுவதால், ஓபிசி பிரிவினருக்கான இடங்கள் குறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவுக்கான மருத்துவ படிப்பு இடங்கள் என்பது பட்டியல் மற்றும் ஓபிசி பிரிவுகளில் வராதவர்களுக்கானவை அல்ல அவை பொதுவானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவு இடங்களை பிடிப்பவர்களை, இடஒதுக்கீட்டு கோட்டாவில் சேர்ப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் கூறப்படுகிறது.

ஓபிசி பிரிவினருக்கான மருத்துவ படிப்பு இடங்களை பறிக்கும் அநீதியை தடுக்கக் கோரி பிரதமருக்கும் ஓபிசி மாணவர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. ஓபிசி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இடங்களை பறிக்கப்படும் அநீதியை களைய உயர்நிலைக்குழு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 49 இடங்கள் தவிர, 2396 இடங்களும் ஓபிசி மாணவர்கள் நீட்டில் அதிக மதிப்பெண் பெற்ற பொதுப்பிரிவில் பெற்ற இடங்களாகும். பொதுப்பிரிவில் தகுதி அடிப்படையில் ஓபிசி மாணவர்களை பெற்ற 2396 இடங்களையும் இடஒதுக்கீட்டு இடங்களாக கணக்கிட்டது தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.        

Related Stories: