தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் வரும் 5-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிச.8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை நெருக்கும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடற்கரையை நெருங்கும் போது கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: