ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளேன்: அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளேன், ஆளுநரை சந்தித்து அரைமணி நேரத்திற்கு மேல் மசோதா குறித்து விளக்கப்பட்டது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். ஆப்லைனில் விளையாடுவதற்கும் ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு எனவும் ஆப்லைனில் விளையாடி யாரும் தற்கொலை முன்னால் செய்துகொள்ளவில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி; தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பு எனவும் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வரும் எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.  

மேலும் ஏற்கனவே உள்ள சட்டங்கள் மூலமாக சூதாட்டங்களை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் ஆளுநர் கேட்ட பதில்களையும் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்டவை ஒரு நோய் என்று உலக சுகாதார நிறுவனம் கூட எச்சரித்துள்ளது எனவும் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்ததற்கான காரணம் ஆளுநருக்கு தான் தெரியும் எனவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.

Related Stories: