×

வாழைப்பழ பூரி

செய்முறை:

மிக்ஸி ஜாரில் வாழைப்பழ துண்டுகள், ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கிண்ணத்தில் கோதுமை மாவு, சீரகம் சேர்த்து கலக்கவும். பிறகு, வாழைப்பழ கலவையை அத்துடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இதனை அரை மணி நேரம் ஊறவிட்டுப் பிறகு, சிறிய உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை பூரி பதத்திற்கு விரித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பூரிகளை ஒவ்வொன்றாகவிட்டு பொரித்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ பூரி ரெடி..!

Tags :
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்