பைக் விபத்தில் உயிரிழந்த இன்ஜினியரிங் மாணவன் உடல் உறுப்புகள் தானம்

அண்ணாநகர்: அண்ணாநகரில் பைக் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த இன்ஜினியரிங் மாணவன் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.சென்னை அண்ணாநகர் சிந்தாமணி அருகே கடந்த 28ம் தேதி பைக்குகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் கீழ்ப்பாக்கம் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்த கொத்தவால்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகன் விக்னேஷ்வரன் (27) பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவன் பவுன்குமார் (21), கல்லூரி மாணவி ஷாலினி (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இந்நிலையில், அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பவுன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி ஷாலினிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பவுன்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.

Related Stories: