காங்கிரசை விட 6 மடங்கு அதிகம் பாஜவுக்கு ரூ.614 கோடி நன்கொடை: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: ஆளும் பாஜ  கடந்த நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியை காட்டிலும் 6 மடங்கு  அதிகமாக தேர்தல் நன்கொடையை பெற்றுள்ளது. பாஜ மொத்தம் ரூ.614 கோடி நிதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜ, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்்ட கட்சிகள் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை தாக்கல் செய்து இருந்தன. இதனை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

இந்த அறிக்கையின்படி, மத்தியில் ஆளும் பாஜ கடந்த 2021-2022ம் ஆண்டில் மொத்தம் ரூ.614.53 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. இது காங்கிரஸ் பெற்றுள்ள நிதியைவிட 6 மடங்கு கூடுதலாகும். காங்கிரஸ் கட்சி  ரூ.95.46 கோடியை மட்டுமே நிதியாக பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.43லட்சமும், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10.05கோடியும் நன்கொடை கிடைத்துள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.44.54 கோடி நிதியை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கயை சமர்ப்பித்துள்ளது. அதில், ரூ.30.30கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆத்ஆத்மி கணக்கு காட்டியுள்ளது.

Related Stories: