சில்லி பாயிண்ட்

* இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டி கனமழையால் ‘முடிவு இல்லாத’ போட்டியாக முடிந்தது! டாஸ் வென்ற நியூசி. பந்துவீச, இந்தியா 47.3 ஓவரில் 219 ரன்னுக்கு சுருண்டது (தவான் 28, ஷ்ரேயாஸ் 49, வாஷிங்டன் 51); நியூசிலாந்து 18 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ரன் (ஃபின் ஆலன் 57, கான்வே 38*, வில்லியம்சன் 0*). 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகன்: டாம் லாதம்.

* வங்கதேசம் ஏ அணியுடன் காக்ஸ் பஜாரில் நடக்கும் முதல் டெஸ்டின் (4 நாள் போட்டி) முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்திருந்த இந்தியா, 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன் குவித்துள்ளது (117 ஓவர்). ஜெய்ஸ்வால் 145, கேப்டன் ஈஸ்வரன் 142, துல் 20, சர்பராஸ் 21, ஜெயந்த் 10 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் 26,உபேந்திரா 27 ரன்னுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக, வங்கதேசம் ஏ அணி முதல் இன்னிங்சில் 112 ரன்னுக்கு ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது (45 ஓவர்).

Related Stories: