வைகோ குற்றச்சாட்டு ஆன்லைன் ரம்மியால் ஒடிசா பெண் இறந்தது தமிழக ஆளுநர் அலட்சியத்தால் தான்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை” வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற முனைந்தது. அதனையும் ஆளுநர் வழக்கம் போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய் விட்டது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இன்று ஆளுநர் மாளிகை முன் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: