அண்ணாமலை தகவல் இலங்கை சிறைபிடித்த தமிழக மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 24 பேர் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களை மீட்க தமிழக பாஜ சார்பில் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டு 24 மீனவர்களை பிணையில் விடுவிக்கவும், 5 படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தமிழக பாஜ கட்சி மீனவ சமுதாய மக்களுக்கு என்றும் அரணாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: