தெலங்கானாவில் போலி சிபிஐ அதிகாரியை சந்தித்து பேசிய அமைச்சர், எம்பிக்கு சிபிஐ சம்மன்: இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

திருமலை: தெலங்கானா மாநில டிஆர்எஸ் கட்சி அமைச்சர் கங்குல கமலாகர், எம்பி வாவிராஜூ ரவிச்சந்திராவும் கிரானைட் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கங்குலா கமலாகர் துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது வீட்டில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  கரீம்நகரில் உள்ள அவரது வீடு பூட்டியிருந்த நிலையில், அமைச்சரை தொடர்பு கொள்ள முயன்று முடியாததால் வீட்டின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்து அதிரடியாக சோதனையிட்டனர்.

இதேபோல் ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள எம்பி ரவிச்சந்திராவின் கிரானைட் நிறுவன அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.   இந்நிலையில் சமீபத்தில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய போலி சிபிஐ அதிகாரியான ஸ்ரீனிவாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சர் கங்குல கமலாக்கரை சந்தித்துள்ளார். அப்போது சுரங்க முறைகேடு வழக்கை சாதகமாக மாற்றுவதாக கூறி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி அமைச்சர் கமலாகர் மற்றும் எம்பி வாவிராஜூ ரவிச்சந்திராவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கங்குல கமலாக்கர் கூறுகையில், ‘சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ் என்ற நபர் என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். அதுகுறித்த விவரம் அறிய சிபிஐ அதிகாரிகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். என்ன நடந்தது என்று சொல்ல எனக்கு 160ன் கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எனவே, டெல்லிக்கு சென்று என்ன நடந்தது என கூறுவேன். வேறு காரணங்களுக்காக சிபிஐ அதிகாரிகள் வரவில்லை. சிபிஐ அதிகாரிகள் வரும்போது ஐதராபாத்தில் இருந்தேன்’ என்றார்.

Related Stories: