சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை பறிப்பு: ஒன்றிய அரசுக்கு கார்கே கண்டனம்

புதுடெல்லி: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகை நிறுத்தியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.  தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை வழங்கப்படும் பிரீ மெட்ரிக் உதவித்தொகையை நிறுத்தம் செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது பற்றி  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில்,‘‘ ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு பயிலும் தலித்,பழங்குடியினர், பிற்பட்டோர், சிறுபான்மையினருக்கான பிரீ மெட்ரிக் கல்வி உதவி தொகை ஒன்றிய அரசால்  நிறுத்தப்பட்டுள்ளது. இது ஏழை மாணவர்கள் கல்வியை வெகுவாக பாதிக்கும். ஏழ்மையான மாணவர்களின் கல்வி உதவியை பறிப்பதன் மூலம் உங்கள் அரசு எவ்வளவு லாபம் ஈட்ட போகிறது’’ என கேட்டார்.

Related Stories: