ஆர்கானிக், குருணை அரிசிக்கு ஏற்றுமதி தடை நீக்கம்: விலை குறைந்ததை அடுத்து ஒன்றிய அரசு நடவடிக்கை..!

டெல்லி: பாஸ்மதி அல்லாத ஆர்கானிக் அரிசி வகைகள், குருணை அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உள்நாட்டு சில்லறை சந்தையில் பாஸ்மதி அல்லாத ஆர்கானிக் அரிசிகளின் விலை உயர்ந்ததால், உள்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க மேற்கண்ட அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும், குருணை அரிசியின் உள்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க கடந்த செப்டம்பர் மாதம் அந்த அரசியின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், பாஸ்மதி அல்லாத ஆர்கானிக் அரிசி வகைகள், குருணை அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. இந்த அரிசி வகைகளின் விலை குறைந்ததை தொடர்ந்து, இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கும் வகையில், பாசுமதி அல்லாத அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: