×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 63,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 63,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இடைநேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 621 புள்ளிகள் உயர்ந்து 63,303 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக நேர முடிவில் 418 புள்ளிகள் உயர்வுடன் 63,100 புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்தது. மகிந்திரா அன்ட் மகிந்திரா பங்கு 4 சதவீதம், அல்ட்ரா டெக் சிமென்ட் பங்கு 2 சதவீதம், இந்துஸ்தான் யுனிலீவர் 1.9 சதவீதம் விலை உயர்ந்தது. பவர் கிரீட், பார்த்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், டைட்டன், கோட்டக் வங்கி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் பங்குகளும் விலை உயர்ந்து கைமாறின.

இண்டஸ்இன்ட் வங்கி, எஸ்.பி.ஐ, எச்.சி.எல். டெக், ஐ.டி.சி. உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140 புள்ளிகள் உயர்ந்து 18,758 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. இடைநேர வர்த்தகத்தில் நிஃப்டியும் 198 புள்ளிகள் உயர்ந்து 18,816 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது.


Tags : Mumbai ,Sensex , Mumbai stock market, Sensex, 63,000 points, achievement
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...