×

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் ஆளுநர் ஏற்படுத்தும் கால தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: முரசொலி பத்திரிக்கை சாடல்

சென்னை : ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அரசின் நிரந்தர சட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் ஆளுநர் ஏற்படுத்தும் கால தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முரசொலி பத்திரிக்கை தன்னுடைய தலையங்கத்தில் சாடியுள்ளது. கோவை சம்பவத்தில் 3 நாட்களில் என்ஐஏ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டதையே பெரிய சர்ச்சைக்கு ஆளாக்கிய ஆளுநர் கர்நாடகத்தில் அதேபோன்று ஒரு சம்பவத்தில் 6 நாட்கள் கழித்தே மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் பற்றி கருத்து தெரிவிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், ஆன்லைன் ரம்மியை தடை செய்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு அதேநாளில் ஒப்புதல் அளித்த ஆளுநர் அது தொடர்பான நிரந்தர தடை சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டவில்லை. உரிய விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், குறிப்பிடத்தக்க அளவு தடை மட்டும் அனுமதிக்க முடியும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறுவதாக, இந்த தடை அமைந்திருப்பதாக ஆளுநர் எழுப்பிய கேள்விக்கு தேவையான அளவில் மட்டுமேயான தடைதான் என்று அளிக்கப்பட்ட விளக்கத்தையும் முரசொலி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆளுநரின் நடவடிக்கை அனைத்தும் ஏதோ கேட்க வேண்டும், தாமதப்படுத்த வேண்டும் என்ற அளவிலேயே இருப்பதாக முரசொலி சாடியுள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற ஏன் தாமதம் என்ற கேள்வி எழுப்பிய பாஜக, அதற்கு அனுமதி அளிக்காமல் இழுத்து அடிக்கும் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா என்று வினவியுள்ளது. திமுக அரசை பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கிலேயே ஆளுநர் செயல்படுவதாக முரசொலி தலையங்கம் கவலை தெரிவித்துள்ளது.


Tags : Governor ,Murasoli Press , Online, Rummy, Permanent, Law, Permit, Governor, Mursoli, Press, Chatal
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...