ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பஞ்சாபி பாடகரின் பண்ணை வீட்டுக்கு ‘சீல்’

குர்கிராம்: ஏரியை ஆக்கிரமித்து பண்ணை வீடுகளை கட்டி வசித்து வந்த பஞ்சாபி பாடகர் தலேர் மெஹந்தியின் வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பிரபல பஞ்சாப் பாடகர் தலேர் மெஹந்தி, சோஹ்னா அடுத்த தம்தாமா ஏரிப்பகுதியில் அங்கீகரிக்கப்படாத மூன்று பண்ணை வீடுகளை கட்டி வசித்து வருகிறார். சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட மூன்று பண்ணை வீடுகளுக்கும், நகர திட்டமிடல் துறையின் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரி அமித் மதோலியா கூறுகையில், ‘எந்தவித அனுமதியும் இல்லாமல் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ளி ஏரிப்பகுதியில் 3 பண்ணை வீடுகளை தலேர் மெஹந்தி கட்டியுள்ளார். இந்தப் பண்ணை வீடுகள் சுமார் 1.5 ஏக்கர் நிலப் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்ட 3 பண்ணை வீடுகளையும் இடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும்’ என்றார்.

Related Stories: