சென்னையில் உள்ள டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிபி வளாகத்தில் அன்போகனின் உருவத்திலும் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவை  போற்றும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான,  டிபிஐ  வளாகத்தில்  பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்பட்டு,  பேராசிரியர் அன்பழகன்  கல்வி வளாகம் என்று மாற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும்,  தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை போற்றும் வண்ணம் , ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ. 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,  பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 5 ஆண்டுகள் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில்,  நடப்பாண்டிற்காக ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு பள்ளி அளவில் இந்த மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

அதேபோல அரசு எடுத்து வரக்கூடிய ஆசிரியர் மாணவர் நலனைச் சார்ந்த இந்த மேம்பாடுகளினால் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி அதிகரித்து வருவதையும் முதலமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார். நடப்பாண்டில் பல்வேறு கட்டுமானத்திற்கும், மராமத்து பணிகளுக்கும் சுமார் ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை செயல்பட்டுவரும் டி.பி.ஐ. வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் நினைவாக அவரது திருஉருவ சிலை நிறுவப்படும் மற்றும் அந்த வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும், கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி ஆகிய பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

Related Stories: