தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிச.2,3-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் தமிழக கடலோரம், உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிச.5-ம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத்தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: