குஜிலியம்பாறை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே தீண்டாக்கல் பகுதியில் வீரபாண்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 180.98 ஏக்கர் புஞ்சை நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில் சட்டப்பிரிவு 78 மற்றும் 79ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட வெளியேற்று மனுவின்படி நேற்று முன்தினம் 21 ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து நிலங்களை மீட்டு கோயில் வசம் ஒப்படைத்தனர்.

இப்பணியில் திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், வட்டாட்சியர் ரமேஷ், தனி வட்டாட்சியர் விஜயலட்சுமி, இத்துறை இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, கோயில் செயல் அலுவலர் முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட நிலங்களின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: