மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய தாராவி பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தை கைப்பற்றியது அதானி குழுமம்: ரூ.5,069 கோடிக்கு ஏலம் எடுத்தது..!!

மும்பை: மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய தாராவி பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 5069 கோடி ரூபாய்க்கான டெண்டரை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியாக மும்பையின் தாராவி கருதப்படுகிறது. இங்கு சுமார் 58,000 குடும்பங்கள், 12,000 தொழில் நிறுவனங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 300 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள தாராவி குடிசை பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ள தாராவியை மறுசீரமைக்க மராட்டிய அரசு கடந்த 15 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. கடந்த 2019ல் இதற்கென அறிவிக்கப்பட்ட ஏலம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மீண்டும் கடந்த அக்டோபரில் மராட்டிய அரசு ஏல அறிவிப்பு செய்தது. இந்த ஏலத்தில் பங்கேற்க இந்தியா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு சேர்ந்த 8 நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால் இறுதியில் அதானி குழுமம், டிஎல்எப் மற்றும் நமன் குரூப் நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றன. அதில் அதானி குழுமம் 5069 கோடி ரூபாய்க்கு இந்த ஏலத்தை பெற்றுள்ளது.

Related Stories: