அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை

வாசிங்டன்: அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமலை 38 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து நெருப்பு குழம்புகளை வெளியேற்றி வருகிறது. அமெரிக்காவின் மேற்கே பசுபிக் பெருங்கடலை ஒட்டி ஹவாய் தீவில் மவுனா லோவா எரிமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4,169மீ உயரத்தில் அமைந்துள்ள அந்த எரிமலை 5,179 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. உலகின் மிகப்பெரிய எரிமலைகளின் ஒன்றான மவுனா எரிமலை 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தொடர்ந்து ஞாயிறு கிழமை இரவு எரிமலை சீற்றத்துடன் நெருப்பு குழம்புகளை உமிழ்ந்து வருகிறது.

எரிமலையில் இருந்து வரும் நெருப்பு குழம்பும், சாம்பலும் இப்போது அந்த மலையின் உச்சி பகுதியை சூழந்த அளவிலேயே இருந்து வருவதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. எரிமலை குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்லத்தொடங்கினாள் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு ஹவாய் தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 1843-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா கடைசியாக கடந்த 1984-ம் ஆண்டில் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: