தென்காசியில் நள்ளிரவில் பெய்த கனமழை!: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!!

தென்காசி: தென்காசியில் நள்ளிரவில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் நள்ளிரவு ஒன்றரை மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை தொடர்வதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அபாய அளவை தொட்டபடி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்த பிறகு மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றாலம் வந்த ஐயப்ப பக்தர்கள், மெயின் அருவியில் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்து ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories: