தேசிய கட்சிகள் பட்டியலில் நடப்பாண்டில் தேர்தல் நன்கொடையாக ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம்

டெல்லி: தேசிய கட்சிகள் பட்டியலில் நடப்பாண்டில் தேர்தல் நன்கொடையாக ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம் பெற்றுள்ளது. நடப்பாண்டில் 7 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய விபரங்கள் தேர்தல் ஆணையத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை அளித்துள்ளது. தேர்தல் நன்கொடையாக 7 தேசிய கட்சிகள் மொத்தமாக ரூ.778.7 கோடியாக பெற்ற நிலையில் ரூ.614.50 கோடி பாஜக பெற்றுள்ளது.

Related Stories: