குடியிருப்பு பகுதியில் நாயை விரட்டிய சிறுத்தை சிசிடிவி காட்சிகள் வைரல்

ஊட்டி:  நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனவிலங்குகளை வேட்டையாடுவதை காட்டிலும், வளர்ப்பு பிராணிகளான நாய், ஆடு மற்றும் கோழி போன்றவற்றை வேட்டையாடுவது சுலபம் என்பதால் சிறுத்தைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் தென்படுகின்றன. இந்நிலையில் ஊட்டி அருகே கல்லக்கொரை கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் உலா வந்துள்ளது. அங்கு வளர்ப்பு நாயை கண்ட சிறுத்தை, அதனை வேட்டையாட துரத்தியுள்ளது. நாய் அதிவேகமாக ஓடி தப்பியது. இக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Related Stories: