பைக் டாக்சியில் பயணம் செய்த பெண் கூட்டு பலாத்காரம் பெங்களூருவில் 3 பேர் கைது

பெங்களூரு: இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ரேப்பிடோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு, பிடிஎம் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மீரா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது தோழியின் விருந்து நிகழ்ச்சியை முடித்து கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்சி புக் செய்துள்ளார். அதன்படி நள்ளிரவு 12.30 மணியளவில் ரேப்பிடோ டிரைவர் ஷகாப்தீன் என்பவர் பிக்அப் செய்துள்ளார். பயணத்தின் பாதி வழியிலேயே மீரா மது போதையில் மயங்கியுள்ளார்.

இதையடுத்து, மீராவை டிரைவர் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து தனது நண்பர்களுக்கு போன் செய்து வர வழைத்துள்ளார். அதன்பேரில் வந்த 2 பேர் மற்றும் பைக் டிரைவர் மூன்று பேரும், மயக்கத்தில் இருந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதிகாலை 5 மணியளவில் மயக்கம் தெளிந்து எழுந்த மீராவை இது குறித்து வெளியில் சென்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து தனது வீட்டிற்கு திரும்பிய மீரா தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தோழிகளிடம் தெரிவித்தார். அவர்களின் உதவியுடன், எலக்ட்ரானிக் சிட்டி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: