இரண்டாம் சீசன் முடிவடைந்த நிலையில் ஊட்டி பூங்காவில் பெரணி செடிகளை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: நீலகிரியில் 2வது சீசன் முடிவடைந்த நிலையில் ஊட்டி பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பெரணி செடிகளை ரசித்து செல்கிறார்கள். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசன் அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் சீசனாகவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் இரண்டாம் சீசனாகவும் அனுசரிக்கப்படுகிறது. தற்போது இரண்டாம் சீசன் கடந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில், முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

ஏப்ரல் மற்றும் மாதங்களில் மலர்கள் பூக்கும் வகையில் தற்போது விதைப்பு பணிகள் பூங்காவில் துவக்கப்பட்டுள்ளது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. நடைபாதை ஒருங்களில் சால்வியா மலர்கள் மட்டுமே உள்ளன. மேலும், கண்ணாடி மாளிகையில் தொட்டிகளில் அலங்கரித்து மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பெரணி செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

பல வகைகளை கொண்ட இந்த பெரணி செடிகளின் நடுவே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். பச்சை பசேல் என காட்சியளிக்கும் இந்த பெரணி செடிகள், கண்ணாடி மாளிகையில் உள்ளதால் பனியில் பாதிக்காமல் காணப்படுகிறது. இதனால், இவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related Stories: