வத்திராயிருப்பு பகுதியில் கனமழை: தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு, ராமச்சந்திரபுரம், ரெங்கப்பநாயக்கர்பட்டி மற்றும் கிருஷ்ணன்கோயில் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3.45 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது. இதனால் ரெங்கப்பநாயக்கர்பட்டி பகுதியில் செல்லும் தரைப்பாலத்திலும், ராமச்சந்திரபுரம்-கீழகோபாலபுரம் செல்லும் பகுதியில் உள்ள தரைப்பாலத்திலும் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. மேலும் ராமச்சந்திரபுரம் ஊராட்சி திருவள்ளுவர் காலனிக்கு மழைநீர் புகுந்தது.

தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் மழைநீர் புகுந்த திருவள்ளூவர் காலனி பகுதியை ராமச்சந்திரபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ஆறுமுகம் இன்று காலை பார்வையிட்டார். மேலும் இப்பகுதியில் சரியான முறையில் ஆக்கிரமிப்பு ஓடைகளை அகற்றியதால் விரைவில் தண்ணீர் வடிந்தது என்று கூறினார்

Related Stories: