பேரணாம்பட்டு அருகே மலைப்பாதை வளைவு: தடுப்பு சுவர்களின் உயரத்தை அதிகரிக்க கோரிக்கை

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே மலைப்பாதை வளைவில் உள்ள தடுப்பு சுவர்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழக-ஆந்திர எல்லையான பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி கிராமத்தையொட்டி காப்புக்காடு உள்ளது. இந்த காட்டின் வழியாக செல்லும் சாலைகளில் சுமார் 7 அபாயகரமான வளைவுகள் உள்ளது.

இந்த சாலையில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் இரவு பகல் நேரங்களில் சென்னை, வேலூர் பகுதிகளுக்கு சென்று வருகிறது. அப்போது, பல நேரங்களில் வாகனங்களில் திடீரென கட்டுப்பாட்ைட இழந்து அங்குள்ள சிறிய அளவிலான தடுப்பு சுவரை தாண்டி சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்குகின்றன. இதுவரை நடந்த விபத்துகளில் சுமார் 100 பேர் வரை இறந்துள்ளனர். இதனால் விபத்து நடந்த பகுதிகளில் தடுப்பு சுவர்கள் இடிந்து காணப்படுகிறது.

 தடுப்பு சுவர்கள் இடிந்துள்ளதால் அவ்வழியாக  செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனும் சென்று வருகின்றனர். எனவே சாலை வளைவில் இடிந்த நிலையில் உள்ள தடுப்புச்சுவரை சீரமைத்து, மேலும் உயர்த்தியும், வலிமையாகவும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: