ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

டெல்லி: விஸ்தாரா - ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் மார்ச் 2024க்குள் ஒருங்கிணைக்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. அதனை விஸ்டாரா முழு சேவை விமான நிறுவனத்துடன் இணைக்கிறது. இதற்கான கூட்டு முயற்சியை இணைக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் 25.1% உரிமையாளராக செயல்படுவதாக விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா குழுமம் தற்போது விஸ்தாரா நிறுவனத்தின் 51% பங்குகளை வைத்துள்ளது.

மீதமுள்ள 49% பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்துள்ளதுள்ளது. ஏர் இந்தியாவை வாங்கியுள்ள டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என்ற விமான சேவை நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், ஏர் இந்தியாவுடன், விஸ்தாராவை இணைப்பு குறித்து டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இதற்கு முன்பே தெரிவித்திருந்தது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மேலும், இந்த இணைப்பு அடுத்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் முடிந்துவிடும் என்பதை இரு நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

Related Stories: