செங்கையில் சிறுமி பலாத்காரம் : போக்சோ வழக்கில் வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மேலச்சேரியை சேர்ந்தவர் செல்வராஜ் (25). தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் கந்தன் மகள் சுமதி (15, பெயர் மாற்றம்) 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த செல்வராஜ், சுமதியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பினார். வெளியில் சென்றிருந்த பெற்றோர் வந்தவுடன், தனக்கு நடந்த சம்பவத்தை கூறி சுமதி அழுதார்.

அதிர்ச்சியடைந்த அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து செல்வராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories: