பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

பாலியல் துன்புறுத்தல் என்பது குழந்தையின் கண்ணியம், ஆளுமை மீது தாக்குதலை ஏற்படுத்தி அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளனர்.

பள்ளிக்களில் பாலியல் குற்றங்கள் நிகழாத வண்ணம், கொள்கைகளை உருவாக்கி அதன் நகல்களை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை அமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.  ஒவ்வொரு பள்ளியிலும் புகார் தெரிவிப்பதற்கும், தீர்வு காணப்பட்டதற்கும் வகுக்கப்பட வேண்டும்  என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: