கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பாஜ தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு

சென்னை; தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று காலை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: