×

வரகு கேசரி

செய்முறை:

வாணலியில் கொஞ்சம் நெய்யைச் சூடாக்கி, முந்திரி, கிஸ்மிஸ் வறுத்துக் கொள்ளவும். அதே நெய்யில் வரகை வறுத்து(கை பொறுக்கும் சூடு வரை வறுக்கவும்), ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இது ரவை பதத்திற்கு இருக்க வேண்டும்.வாணலியில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அரைத்து வைத்துள்ள வரகை போட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்தவுடன் தேங்காய்ப் பூ (சாப்பிடும் போது தேங்காய் சுவை நன்றாக இருக்கிறது) ,சர்க்கரை ,சிறிது உப்பு சேர்த்துக் கிளறவும். இடை இடையே நெய் சேர்த்துக்கொள்ளவும்.

கேசரி பவுடர்(குங்குமப்பூ use செய்தால் நீர் கொதிக்கும் போது அதன் உடன் சேர்த்து கொள்ளலாம்,இவை எதுவும் இல்லாமல் வெறும் நிறம் இல்லாத கேசரியும் செய்யலாம்), ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து இறக்கவும்.உதிரி உதிரியாக சுவை நன்றாக இருக்கிறது.வரகு use செய்பவர்கள் ட்ரை செய்து பார்க்கலாம்.இதை பனிவரகிலும் செய்யலாம்.

Tags :
× RELATED சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்!