பெட்டிகளின் இணைப்பில் இருந்து கழன்று தனியாக ஓடிய ரயில் இன்ஜின்: இன்று காலை உ.பி-யில் பரபரப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் இன்று காலை ரயில் பெட்டிகளின் இணைப்பில் இருந்து கழன்று ரயிலின் இன்ஜின் இன்று காலை தனியாக தண்டவாளத்தில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் ராம்சவுரா நிலையம் அருகே இன்று காலை கங்கா-கோமதி எக்ஸ்பிரஸ் ரயில் லக்னோ நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் இன்ஜின் திடீரென அதன் பெட்டிகளில் இருந்து கழன்று தனியாக சென்றது.

ரயில் பெட்டிகளின் இணைப்பு திடீரெ துண்டிக்கப்பட்டதால், கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் சென்றதும் ரயில் இன்ஜினை லோகோ பைலட் நிறுத்தினார். அவர் இச்சம்பவம் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தொழில்நுட்பக் குழுவின் ஆலோசனையின் பேரில், ரயிலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன்பின், ரயில் பெட்டிகளை இன்ஜினுடன் இணைக்கும் பணி நடைபெற்றது. இதனால் சில மணி நேரங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: