தமிழகத்தில் கடந்த 9ம் தேதி முதல் நேற்று வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய 17 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 9ம் தேதி முதல் நேற்று வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், முகவரி மாற்றம் செய்ய 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். கடந்த 12, 13ம் தேதி (சனி, ஞாயிறு) நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய 7 லட்சத்து 10,274 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 7 7,20,374 பேர் பெயர் சேர்க்க, நீக்கம், மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தனர். பெயர் சேர்க்க மட்டும் 4,44,019 பேரும், ஆதார் எண் இணைக்க 67,943 பேரும், நீக்கம் செய்ய 77,698 பேரும், முகவரி மாற்றம் செய்ய 1,30,614 பேர் என மொத்தம் 7,10,274 பேர் விண்ணப்பித்தனர். மீண்டும்  வருகிற 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த சனி (26ம் தேதி), ஞாயிறு (27ம் தேதி) தமிழகம் முழுவதும் பெயர் சேர்க்க, நீக்கம், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் செய்தனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் கடந்த 9ம் தேதி முதல் நேற்று (28ம் தேதி) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய 17 லட்சத்து 2 ஆயிரத்து 689 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி பெயர் சேர்க்க 7,57,341 பேரும், நீக்கம் செய்ய 6,05,062 பேரும், முகவரி மாற்றம் செய்ய 3,40,277 பேரும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 9 பேரும் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பித்தவர்கள் வீட்டுக்கே சென்று சோதனை செய்யப்படும். இதையடுத்து புதிய வாக்காளர் பட்டியல் 2023ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். சிறப்பு முகாம் முடிவடைந்தாலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்’’ என்றார்.

Related Stories: