ஆன்லைன் ரம்மியால் தொழிலாளி தற்கொலைக்கு தமிழக ஆளுநர் தான் பொறுப்பு; ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிக்கை

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகிறது. கவர்னர் கேட்ட விளக்கத்தை தமிழக அரசு அளித்தும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பெண்மணி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த மரணத்திற்கு ஆளுநரே முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் மக்களாட்சி தத்துவத்திற்கு நேர் எதிரானதாக அமைந்திருக்கிறது. தனது பணியை சரிவர செய்யாததால் வடமாநில பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான தமிழக கவர்னர் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: